தேர்தல் பட்டியலில் இருந்து நடிகை தமிதா நீக்கப்பட்டார்
இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகவின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு அவர் சென்ற பொழுது, அந்தப் பட்டியலில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் சஜபாவை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன நேற்று (10) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.