நேற்று பதிவான விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு !

நேற்று பதிவான விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு !

களுத்துறை – கட்டுக்குருந்தை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் (12) பெலிஅத்தயிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மோதியதிலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 22 வயதான தந்தை ஒருவரும், இரண்டரை வயதான அவரது மகனும் 47 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் (12) யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய ரக லொறி ஒன்று எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது.

விபத்தில் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கிரிந்திவெல பொலிஸ் பிரிவுவில் நேற்றைய தினம் (12) மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வாகனத்துடன் மோதியதில் 30 வ வயதான மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் நேற்றைய தினம் (12) மெதிகிரியவில் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு சென்றதில் அதனை செலுத்தியவர் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை , அரநாயக்க பிரதேசத்தில் நேற்றைய தினம் 50 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அரநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீது வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில் குறித்த நபர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )