பொதுத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்குகிறார் அன்ரனி எமில் லக்சுமி காந்தன்
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அன்ரனி எமில் லக்சுமி காந்தன் சுயேட்சையாக கோடாரி சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் , “வன்னியின் அரசியல்பரப்பில் மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றத்தை செயற்படுத்துவதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் புதிய களத்தை ஏற்படுத்தியாருக்கிறோம். எங்களுடைய இலக்கு, சலுகை அரசியலைத் தவிர்த்து, ஒருநிலையான பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தி , வளர்ச்சிப்பாதைக்கிட்டுச் செல்வதே.” என தெரிவித்தார்.