பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம்

பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம்

கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )