பட்டுப் புடவையை பராமரிப்பது எப்படி ?

பட்டுப் புடவையை பராமரிப்பது எப்படி ?

எத்தனையோ புடவை ரகங்கள் நம்மைச் சுற்றி வந்தாலும் பட்டுப் புடவைக்கு என்றுமே தனிச் சிறப்பு தான்.

குறிப்பாக, பண்டிகை நாட்களில் பட்டுப் புடவை அணிந்தால்தான் அந்த நாளே சிறப்பாக இருக்கும்.

அந்த வகையில் பட்டுப் புடவையை பராமரிப்பதற்கென்று சில குறிப்புகள் உள்ளன.

பட்டுப் புடவையை வீட்டில் துவைப்பதை விட ட்ரைவொஷ்க்கு கொடுப்பது நல்லது.

அவ்வப்போது பட்டுப் புடவையை எடுத்து திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும்.

மிதமான வெயிலில் பட்டுப் புடவையை காய வைத்து எடுக்க வேண்டும்.

வெளியில் அணிந்துச் சென்ற பட்டுப் புடவையை 3 மணத்தியாலமாவது உலர விட்டு அதன் பின்னர் மடித்து வைக்க வேண்டும்.

பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது.

சவர்க்காரமோ அல்லது சலவைத் தூளோ கொண்டு கழுவக் கூடாது.

பட்டுப் புடவையில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 10 நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவ வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட வேண்டும்.

அயர்ன் செய்யும்போது ஜரிகையைத் திருப்பி அதன் மீது மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )