கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் நேற்று (28) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில்நேற்று (28) அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இன்று (29) காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில், வடக்கு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )