ஈரானின் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு

ஈரானின் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு

ஈரான் நாட்டின் 14வது ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28ம் திகதி நடைபெறும் என ஈரான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முகமது மொக்பர், உட்பட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைத்த பின்னர்  ஈரானுக்கு புறப்பட்ட வேலையில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )