ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

ஹட்டன், கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள மதகு ஒன்றில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் இன்று (02) கண்டு பிடிக்கப்பட்டதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை நகரில் வடிகால் அமைப்பில் அமைந்துள்ள மதகு ஒன்றில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ஊடாக பயணித்த ஒருவர் பாதுகாப்பற்ற மதகில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )