20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதா ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (29) அதிகாலை 2 மணியளவில் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இருந்து ஹட்டன் வரையில் காலை வேளையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும், காரின் சாரதி வீதியை சரியாக அவதானிக்காமையால், கார் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கார் விபத்துக்குள்ளானதில் காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )