ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்

ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மேலும அவர், ‘சுதேச வைத்திய அமைச்சு என்ற வகையில் நாம் இதுவரை பெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து சித்தியடைந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் தொழிற்பயிற்சி தாமதமானது. அதன்படி, ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி பட்டதாரிகள் 207 பேருக்கு 67,500 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவுடன் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 153 பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படும். அதன்படி 418 பட்டதாரிகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது.

சுதேச வைத்திய அமைச்சும், ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து தற்போது பாரம்பரிய வைத்தியர் பதிவுகளை எமது நாட்டில் விரிவுபடுத்தி வருகின்றன. அதன்படி, எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை பதிவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )