தொடர்ச்சியாக அடுத்தடுத்து உலக சாதனை நிகழ்த்தி வரும் கிண்ணியாவை சேர்ந்த சிறுவன்
மிகப் பெரிய எண்களை இலகுவாக ஆங்கில மொழியில் கூறியும்
10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும் ஆங்கில மொழியில் கூறிய 4 வயது சிறுவன்,
சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான திரு.மொஹமட் நஸ்மி மற்றும் திருமதி. பாதிமா பாசீஹா போன்றோரின் 4 வயது மகனான மொஹமட் அக்லான் பிலால் கணித அடுக்குகளின் விதிகள் (Low of Exponents) முறையில் 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும், மிகப் பெரிய எண்களை இலகுவாகவும் ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டார்.
இவருடைய உலக சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு. கதிரவன் இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு. தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன் விக்னேஸ்வர ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. மொஹமட் பர்சான் போன்றோர் உலக சாதனையை உறுதி செய்து சாதனை சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களுடன் இணைந்து வழங்கிப் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வு கின்னியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.
இந்த நிகழ்வினை கதிரவன் இன்பராசா அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைக்க கிண்ணியா வளையக்கல்வி பணிப்பாளர் திருமதி.முனவ்வரா, கின்னியா மத்திய கல்லூரியின் அதிபர் திரு நஜாத்,கின்னியாவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் திரு.சமீம் மற்றும் குறிஞ்சாகேணி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் அஜித் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.
விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி திரு.ஹூஸைன், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியின் அதிபர் திரு.முனவ்பர், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.நஸீரா நஜாத் போன்றோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கு கொண்டு சிறுவன் அக்லான் பிலாலை மேடையில் வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்கள்.
இச் சிறிய வயதில் உலக சாதனை படைத்த சிறுவன் அக்லான் பிலாலை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் வியந்து பார்த்து வாழ்த்திப் பாராட்டினார்கள்.
இந்தியாவில் இருந்து நேரலையில் நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் சிறப்பு நடுவர் திரு.சிவ ஷங்கரன் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்தினார்கள்.