தங்கலான் ட்ரெய்லர் நாளை ரிலீஸ் !

தங்கலான் ட்ரெய்லர் நாளை ரிலீஸ் !

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இத் திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.

இத் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நாளை படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

தங்கலான் திரைப்படத்தில் விக்ரமின் கெட் – அப்பை பார்த்து எப்போது திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )