“செப்டெம்பர் 21 என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்கும் தினமாகும்”

“செப்டெம்பர் 21 என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்கும் தினமாகும்”

“செப்டெம்பர் 21ஆம் திகதி என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்கும் தினமாகும். எமது நாட்டின் வரலாற்றைப் பொன்னெழுத்துகளால் குறிக்கின்ற யுகத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். இயற்கையாகவே இருக்கின்ற பால்நிலை வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த விதமான வித்தியாசமும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் கிடையாது. பெண்கள் என்பதனால் மாத்திரமே நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகிறோம். வறுமையை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெண்களே’’ என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைப் பெண்களை எடுத்துக்கொண்டால் வீட்டில் களத்தில் களத்துமேட்டில் ஆலையில் வேலைத்தளத்தில் அவர்கள் பெரும்பங்கை ஆற்றவேண்டியுள்ளது. இந்த எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றது.

அந்தப் பெண்களின் பிரதிநிதித்துவம் தான் இது. இலங்கையின் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பைச் செய்தால் 25 சதவீதமான குடும்பங்கள் பெண்களைத் தலைமையாகக் கொண்டதாகவே இருக்கின்றன. அந்தத் தாய்மார்களும் சகோதரிகளும்தான் குடும்பங்களையும் கவனத்திற்கொண்டு பொருளாதாரச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, அதற்காக தேசிய மக்கள் சக்தி பாரிய பணியை ஆற்ற வேண்டியுள்ளது.

எமது பாடசாலைகளில் வைத்தியசாலை களில் பல்கலைக்கழகங்களில் அதைப் போலவே வெளிநாட்டுச் சேவைகளில் பெண்களே அதிகமாக பொருளாதாரப் பங்கை ஆற்றி வருகிறார்கள்.

எனவே, அவர்களின் பாதுகாப்புக்கான கொள்கையை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற எமது அன்புக்குரிய சகோதரிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர்களின் உரிமைகள் முறையாக அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் அடிமைச் சேவகம் புரிந்து வருகிறார்கள். வேலைக்கேற்ற சம்பளம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பாதுகாப்புக் கிடையாது. இந்தப் பிரச்சினைகள் பற்றி தேசிய மக்கள் சக்தி அதிக கவனம் செலுத்தியுள்ளது’’ என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )