சப்பாத்தி சுவையாக செய்ய சில டிப்ஸ் : இந்த விஷயங்களை எப்போதும் மறக்காதீங்க !

சப்பாத்தி சுவையாக செய்ய சில டிப்ஸ் : இந்த விஷயங்களை எப்போதும் மறக்காதீங்க !

சப்பாத்தி செய்து அதன் மீது சர்க்கரை, ஏலக்காய் கலந்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பிறகு குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

எண்ணெய் மற்றும் நெய் கலந்து சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொண்டால் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.

சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய் தடவி வைத்தால் கருப்பாக காய்ந்து போகாமல் இருக்கும்.

சப்பாத்தி சுடும்போது கல் சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பிறகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

சப்பாத்தியை நன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால் சப்பாத்தி நன்கு உப்பி வரும். மிருதுவாக இருக்கும்.

சப்பாத்தி திரட்டும் போது மாவை தொட்டு சப்பாத்தியை திரட்டி பிறகு எண்ணெய் ஊற்றி திரட்டினால் சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றத் தேவைப்படாது.

சப்பாத்தி தேய்க்கும் போது மெல்லியதாக இல்லாமல் சற்று கனமாக தேய்த்தால் சப்பாத்தி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது பாலையும் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும்.

வெந்நீரில் மாவினைப் பிசைவதால், பிசையும் போதே மாவு சற்று வெந்துவிடும். பிறகு லேசாக சூடு செய்தாலே போதும் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )