மகளின் பெயரை அறிவித்த தீபிகா – ரன்வீர் தம்பதி!
பாலிவுட்டின் அனைவரும் விரும்பும் நட்சத்திரஜோடியாக ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியினர் உள்ளனர்.
இவர்கள், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.
இந்த தகவலை தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையின் கால்கள் மட்டும் தெரியும் போட்டோவை பதிவிட்டு,குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua padukone singh ) என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘ துவா என்பதற்கு பிரார்த்தனை என்று அர்த்தம். அவளுக்கு இந்த பெயர் வைக்க காரணம் அவள் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கிறாள். எங்கள் இதயங்கள் அன்பு மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றால் நிரம்பி இருக்கிறாள்’ என தீபிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தீபிகாவின் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.