பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிப்பு !

பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அறிவிப்பு !

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேட்சை குழுக்களுக்கான கட்டுப்பண விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள நிலையில், வேட்பு மனுவில் 21 வேட்பாளர்கள் பெயரிடப்பட வேண்டும்.

அங்கு சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதற்கு 42,000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள நிலையில், அங்கு 21 பேரின் பெயர்கள் வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதோடு, சுயேட்சைக் குழுக்கள் 44,000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

களுத்துறை மாவட்டத்தில் 11 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ளனர்.

அதற்காக 14 பேர் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.

களுத்துறை மாவட்டத்தின் சுயேட்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணமாக 28,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை நாடாளுமன்றுக்கு கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 19 நாடாளுமன்ற உறுப்பினர்களும், திருகோணமலையில் இருந்து குறைந்த பட்சமாக 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )