ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாடுகள் தளர்வு !

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாடுகள் தளர்வு !

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில்  விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன், புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.       

அதன்படி, ஆரோக்கியமான விலங்குகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.  

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

பன்றிக் காய்ச்சல் பரவல் தற்போது குறைவடைந்துள்ளதால் பழைய வர்த்தமானி அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதுடன் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பன்றிகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படாத  ஆரோக்கியமான விலங்குகளையே இவ்வாறு கொண்டு செல்ல முடியும்

இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் 50 வீதமான பன்றிகள் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான பன்றிகள் உயிரிழந்துள்ளதாக இந்த திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.  

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )