பன்னீர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமா ?

பன்னீர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமா ?

பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.

பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.

சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.

பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது. இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )