சூரியன் மறைந்த பின் இந்த பொருட்களை தானம் கொடுக்க வேண்டாம்

சூரியன் மறைந்த பின் இந்த பொருட்களை தானம் கொடுக்க வேண்டாம்

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இவற்றை செய்தால் நன்மை. இவற்றை செய்யக்கூடாது என்று ஒரு சில குறிப்புகள் கூறுகின்றன.

அதன்படி சூரிய அஸ்தமனத்தின் பின்னர் கீழ்காணும் சில பொருட்களை தானமாக வழங்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

அப்படி கொடுத்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போய்விடும் எனக் கூறப்படுகிறது.

மஞ்சள்

குரு பகவானின் அம்சமாக மஞ்சள் உள்ளது. சூரிய அஸ்தமனத்தின் பின்னர் மஞ்சள் தானமாக் கொடுத்தால் அது வீட்டுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

பணம்

பணத்தின் அதிபதி லட்சுமி தேவி. சூரியன் மறையும் நேரத்தில் லட்சுமி வீட்டுக்கு வருவாள் என்று கூறப்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

உப்பு

சூரிய அஸ்தமனத்தின் பின்னர் உப்பை தானம் கொடுக்கும்பொழுது அது பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

வெங்காயம், வெள்ளைப் பூண்டு

வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு கேதுவின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே இதை சூரியன் மறைந்ததன் பின்னர் மற்றவர்களுக்கு தானமாகக் கொடுப்பது குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும்.

பால்

சந்திர கிரகத்துக்கு உரியது பால். எனவே சூரிய அஸ்தமனத்தின் பின்னர் பால் தானம் செய்வது அமங்களமாக கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )