லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி ஆகியோர் முறையே டிசம்பர் 2 மற்றும் நவம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (18) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நுகேகொட, மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கண்டியில் வைத்து முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.