சபரிமலையில் ஆர்கிட் மலர்களுக்கு தடை

சபரிமலையில் ஆர்கிட் மலர்களுக்கு தடை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள நீதிமன்றமும் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந் நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர்.

மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )