தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது
தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம்.
நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான திட்டங்களுக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம். அவ்வாறே, நாட்டுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்போம்.
அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவோம், அதற்கான மாற்று வேலைத்திட்டங்களையும் முன்வைப்போம்.
இது தான் எமது கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றைய(03) பாராளுமன்ற சபை அமர்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.