IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்
எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றியமையாதது என்பதில் எந்த வாதமும் இல்லை.
அந்த வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால் 2022ஐ விடமும் மிக மோசமாக நாடு நெருக்கடிக்குள் செல்லலாம்.
மேடைகளின் திருத்தங்கள் கொண்டு வருவதாக வாதங்களை முன்வைத்தாலும், ரணில் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச நாணய நிதி நிதிய ஒப்பந்தம் அவ்வாறே தொடர்வது நல்ல விடயம் என்றே கூற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.