புஷ்பா -2 இரண்டே நாட்களில் 400 கோடி வசூல் !

புஷ்பா -2 இரண்டே நாட்களில் 400 கோடி வசூல் !

‘புஷ்பா 2′ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் 400 கோடி ரூபாவை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா.

சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.

மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.

இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.

இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )