சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பெயர் டீசர் வெளியீடு !

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பெயர் டீசர் வெளியீடு !

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் தற்பொழுது அடுத்த படமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு புதுவித கதைக்களத்துடன் காமெடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )