பாலியல் நேரலை காட்சிகளை சீனாவுக்கு விற்ற இளம் தம்பதிகள் கைது
இணையம் ஊடாக சீன நிறுவனமொன்றுக்கு பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து அனுப்பிய இரண்டு இளம் கணவன் மனைவி தம்பதிகளை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குறித்த இளம் தம்பதியினரை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது, முன்னர் கொள்ளுப்பிட்டியில் வசித்த குறித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு ஜோடி குறித்த வீட்டில் இருந்து, பாலியல் காட்சியில் நேரடியாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு ஜோடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.