ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அனைத்து நாடுகளுடனும் மற்றும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி வழங்கியுள்ளார்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை நடத்துவதும், ஜனாதிபதியை தெரிவு செய்வது மாத்திரம் ஜனநாயகமல்ல. எனது ஆட்சியில் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பேன்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பையும், அவரது அரசியல் வகிபாகத்தையும் மதிக்கிறேன். சவால்மிக்க பொருளாதார சூழலில் ஆட்சியை பொறுப்பேற்றுள்ளேன்.

அனைவருடனும் ஒன்றிணைந்து பயணிப்போம். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் ‘ என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )