வங்காள விரிகுடாவில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 12ஆம் திகதி , தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்காள விரிகுடாவில் மணிக்கு 55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.