பராட்டே சட்டம் மீதான இரத்து மார்ச் வரை நீடிப்பு
பராட்டே சட்டம் அமுலாக்க இரத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானிந்துள்ளது.
அதற்கமைய, 2025.03.31 திகதி வரை பராட்டே சட்ட அமுலாக்க கைவிடுதலை நீடிப்பதற்கும், இலங்கை மத்திய வங்கியால் அரச மற்றும் தனியார் வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் வினைத்திறனான பங்களிப்பின் மூலம் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பன்முக பொறிமுறையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.