“17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு!

“17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு!

சமீபகாலமாக தனுஷ், ஜெயம் ரவியை தொடர்ந்து திரைப் பிரபலங்கள் பலர் தங்களது திருமண முறிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வந்தனர். 2024ம் வருடம் திரைப் பிரபலங்களின் விவாகாரத்து வருடம் என இணையவாசிகள் பேசும் அளவுக்கு பிரபலங்களின் விவாகாரத்து எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில் அந்த வரிசையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது திருமண வாழ்வு முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.

‘ அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G.S.தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )