எலிக் காய்ச்சல் – டெங்கு நோய் என்பவற்றின் தாக்கம் தீவிரமடைய வாய்ப்பு !
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலையால் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் மற்றும் எலிக் காய்ச்சல் என்பவற்றின் தாக்கம் தீவிரமடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கரவெட்டி – துன்னாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் எலிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாகவும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.