கலகலப்பு பட பிரபலம் நடிகர்  காலமானார்

கலகலப்பு பட பிரபலம் நடிகர் காலமானார்

பிரபல நடிகர் கோதண்டராமன் (65) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் நடிகர் கோதண்டராமன். ஸ்டண்ட் மாஸ்டர் மட்டுமின்றி பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர், கலகலப்பு படத்தில் நடிகர் சந்தானம் உடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் கோதண்டராமன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கோதண்டராமன் காலமானார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )