வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் சிறப்பு வைத்திய நிபுணர்கள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வைத்தியர்களின் ஓய்வு வயது 63ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அத்தோடு, 2024 டிச.31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள வைத்திய அதிகாரிகளுக்கும் இது பொருந்துமென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வைத்தியர்களின் ஓய்வு வயது 65ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )