பெருந்தோட்ட சமூகத்தினருக்கான மலையக சாசனம் வெளியீடு
இலங்கை நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்பில் பெருந்தோட்ட சமூகம் முக்கிய பங்கை தொடர்ந்து வகித்து வருகிறது இந்திய வம்சாவளி தமிழ் (மலையக தமிழர்) பெருந்தோட்ட சமூகம் இலங்கைக்கு வருகை தந்து 200 வது ஆண்டு நிறைவை கௌரவிக்கும் முகமாக “மலையக சாசனம்” வெளியீடு உத்தியோகபூர்வமாக நேற்று (17) நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் நுவரெலியாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள், சட்டத்தரனிகள், பேராசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள், சிவில் அமைப்பினர், வர்த்தகர்கள், துறைசார் ஆர்வலர்கள், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், அமைச்சின் அதிகாரிகள், என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
CATEGORIES Sri Lanka