ஹட்டன் – கண்டி வீதியில் பஸ் விபத்து ; மூவர் பலி
ஹட்டன் – கண்டி வீதியில் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (21) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஹட்டன் தனியார் பஸ் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 46 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் திக் ஓயா, வட்டவளை, கிளங்கன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து போக்குவரத்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka