பொதுஜன பெரமுன தலைமையக வளாகத்தில் அமைதியின்மை

பொதுஜன பெரமுன தலைமையக வளாகத்தில் அமைதியின்மை

பத்தரமுல்லை – நெலும் மாவத்தை பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்தில் இன்று (28) அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கு பிரவேசிக்கும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்தே, இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

“நாட்டை இல்லாதொழிக்கும் சட்டமூலத்தை தோற்கடிப்போம்” என வலியுறுத்தியே இந்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நெலும் மாவத்தைக்குள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்திற்கு வருகைத் தந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தேங்காய் உடைக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், இந்த பகுதியில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )