பண்டிகை கால பண மோசடிகள் அதிகரிப்பு
நத்தார் பண்டிகைக் காலம் மற்றும் புதுவருட பிறப்பை இலக்காகக் கொண்டு, திட்டமிட்ட குழுவினரால் மீண்டும் பண மோசடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் கணினி அவசர பதிலளிப்புப் பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த (CERT) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நத்தார் பண்டிகைக் காலம் மற்றும் புதுவருட பிறப்பை இலக்காகக் கொண்டு ஒருசில திட்ட மிட்ட குழுவினால் மீண்டும் பண மோசடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட குழுவினரால் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.
இதில் விரைவான அதிகரிப்பையும் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது.எனவே, ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யாராவது வங்கிக் கணக்கு, தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள், இரகசியக் குறியீடுகள் (Pass Word) என்பவற்றைக் கேட்டால் மூன்றாம் தரப்பினருக்கு அதனைப் பெற்றுக்கொடுக்க கூடாது. மக்கள் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும்.
பரிசு கிடைத்துள்ளதாகவும் விசேட கழிவு அல்லது ஏதாவதொரு நிறுவனத்தில் பொருள் கொள்வனவுக்காக வவுச்சர் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து வங்கிக் கணக்குகள் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அல்லது வங்கிகளில் தகவல்களைப் பெற்றுக்கொண்டு ஏதாவதொரு முறையில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டால் அதனை மூன்றாம் தரப்புக்கு பகிர வேண்டாம்.
போலியான முறையில் திட்டமிட்ட தரப்பினர் நபர்களை ஏமாற்றி நிதி மோடி செய்யத் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.