மோட்டார் சைக்கிள்களை திருடிய நால்வர் கைது
தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26) அம்பலாந்தோட்டை, காலி, மாத்தறை மற்றும் சூரியவெவ பொலிஸ் பிரிவுகளில் 09 மோட்டார் சைக்கிள்களை திருடிய 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 39, 52 மற்றும் 58 வயதுடையவர்களெனவும் சந்தேகநபர்கள் அம்பலாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களெனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து 09 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka