திருகோணமலையில் சிறிய ரக விமானம் மீட்பு
திருகோணமலை கடற்பரப்பில் நேற்று (26) இரவு மீனவர்கள் குழுவொன்று ஆளில்லா சிறிய ரக விமானமொன்றை கண்டெடுத்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த இந்த குட்டி விமானம் ஒன்பது அடி நீளமும், மூன்றடி சுற்றளவு கொண்டதெனவும் ஒவ்வொரு இறக்கையும் நான்கு அடி நீளம் மற்றும் இருபுறமும் இரண்டு இறக்கைகள் உள்ளதெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது விமானத்தின் பிரதியாக உருவாக்கப்பட்டதா, எஞ்சின் உள்ளதா அல்லது மின்சுற்று உள்ளதா என்பதை பரிசோதித்து அறிக்கை பெறுவதற்காக விமானப்படையிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
CATEGORIES Sri Lanka