பண்டிகைக் காலங்களில் கொழும்பில் குவியும் குப்பைகள் !
பண்டிகைக் காலங்களில் கொழும்பு மாநகரசபைக்குள் அதிகளவான குப்பைகள் சேர்வதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
வழமையாக நாளாந்தம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படும். இது இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நாளாந்தம் சாதாரணமாக 420 தொடக்கம் 450 தொன் குப்பைகள் அகற்றப்படுகின்ற நிலையில், பண்டிகைக் காலத்தில் குப்பைகள் சிறிதளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் கொழும்பிற்கு
அதிகளவானவர்கள் வருகை தருவதால் இந்தத் தொகை சுமார் 500 தொன்களாக அதிகரிக்காலாம் என கணித்துள்ளோம் என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிகளவான உணவுப்பொருட்கள் வீசப்படுவதனால் மக்கும் கழிவுகளின் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.