60 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக இரத்து !
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சவீன் செமகே தெரிவிக்கையில் ,
மருந்தகங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உரிமம் பெற்ற மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உரிமம் வழங்குவதற்கு முன் அனைத்துத் தேவைகளையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது ‘ என தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் சவீன் செமகே தெரிவித்துள்ளார்.
TAGS Hot NewsLicensesNMRA Dr. Saveen SemagepharmaciesSri lankatemporarily suspendedThe National Medicines Regulatory Authority