மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா !

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா !

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குண்டூர் காரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

அடுத்ததாக மகேஷ் பாபு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.

இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என தலைப்பிட்டுள்ளனர்

உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொள்கிறார்.

ஒளிப்பதிவை பிஎஸ் வினோத் மேற்கொள்ளவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )