அன்று ஓடி ஒளிந்தவர்கள் பலர் இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் தேர்தலில் போட்டி !
அன்று ஆட்சியை ஏற்க ஒருவரேனும் முன்வரவில்லை ஆனால் இன்று நாட்டை பொறுப்பேற்க 38 பேர் முன்வந்துள்ளனர். அந்தநிலைக்கு நாட்டை கொண்டு வந்
திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியென பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன
இதனைக் குறிப்பிட்டார்.
அவா் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இன்று 39 பேர் முன்வந்துள்ளனர், அவர்கள் பெருமளவு செலவு செய்து பிரசாரம் செய்கின்றனர் 2022 இல் இவர்கள் எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை ,அன்று நான் எதிர்க்கட்சி தலைவருடன் இருந்தேன்.
அவரை அதிகாரத்தை ஏற்றுக்கொள் ளுமாறு கூறினோம்.
அன்று ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதிகாரத்தில் கைவைத்தால் சுட்டுவிடும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு அச்சம் காட்டினர்.
மக்கள் வரிசைகளில் நின்றுநின்று உழன்றுபோயினர். துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் திரும்பிச் சென்றன. நாட்டு மக்களுக்கு ஒரு நாள் சாப்பாடு கூட கொடுக்க
முடியாமல் இருந்தனர்.
ஒரு சதம் கூடம் இல்லாத நாட்டைத்தான் ஜனாதிபதிரணில் விக்கி ர மசிங்கவுக்கு கிடைத்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்ட பின்னர் சஜித்துக்கும்
பதவி மீது ஆசை வந்தது.
மறுமுனையில் அநுரவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
அநுரவும் ஓடிமறைந்தார். சரத் பொன்சேகாவையும் அழைத்தார். அவரும் நிபந்தனைகளை கூறினார்.
அன்று ஒருவரும் ஆட்சியை ஏற்க தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார்.