பங்களாதேஷில் அதிகரித்துள்ள பாம்பு கடி !
பங்களாதேஷில் பாம்பு கடி அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, பங்களாதேஷில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விஷ எதிர்ப்பு மருந்துகளை சேமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பாம்பு கடித்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லுமாறு அந்நாட்டு சுகாதார அமைச்சர் வைத்தியர் சமந்தா லால் சென் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் கிராமப்புறங்களில் காணப்படும் ரசல்ஸ் விரியன் பாம்புகளின் (Russell’s viper) தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் 7,000 பேர் பாம்புக் கடியால் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பாம்பு இனம் தற்போது பங்களாதேஷில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
TAGS BangladeshHealth Minister Dr Samanta Lal SenHot Newssnake bitesSri lankaWorld Health Organization