அரச வைத்தியசாலை கட்டமைப்புக்குள் தரமற்ற மருந்துகள் எதுவும் இல்லை !

அரச வைத்தியசாலை கட்டமைப்புக்குள் தரமற்ற மருந்துகள் எதுவும் இல்லை !

அரசாங்க வைத்தியசாலைகள் கட்டமைப்பில் தரமற்ற மருந்துகள் எதுவுமில்லையென சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தில் எந்த வகையிலும் இடமில்லையெனவும், அரசாங்க வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் மருந்துகளை நோயாளிகள் அச்சமின்றி பாதுகாப்பாக பயன்படுத்த முடியுமென்றும்
அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்ற மருந்துகள் தொடர்பிலான விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை
குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய சுகாதாரத்துறை தொடர்பாகவும் மருந்துகள் கொள்வனவு தொடர்பாகவும் ஊடகங்களில் பல தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

சுகாதார அமைச்சு மருந்துகளை திடீரென கொள்வனவு செய்வதில்லை. தரத்தில் குறைந்த எந்த மருந்து வகைகளும் கொள்வனவு செய்யப்படுவதில்லை என்று தெரிவித்த அமைச்சர், இலங்கையில் பதிவு செய்யப்படாத மருந்துகள் எந்த சூழ்நிலையிலும் நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை.

ஒன்று இலங்கைக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தம் மூலமும் இந்திய அரசு இலங்கைக்கு விடுத்த கோரிக்கையின்படி இந்திய மக்களுக்கும் அண்டை நாடுக
ளுக்கும் உயர்தர மருந்துகளை வழங்கும் முறையாகும். ‘Janaaushadhi
Medicine Movement’ என்ற அமைப்பு மூலம் இந்த நடவடிக்கையை இந்தியா
முன்னெடுத்துள்ளது

அந்த அமைப்பில் இலங்கை உள்வாங்கப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கமைய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்று நம்பினோம். அமைச்சரவைப்பத்திரம் அங்கீகரிக்கப்பட்ட போதிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் கைச்சாத்திடப்படவில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டால், மருந்துகள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையினால் பதிவு செய்த பின்னரே மருந்துகள் மற்றும் உற்பத்திப்பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படும்.

இரண்டாவது விடயம் இலங்கையில் கடந்த ஒரு வருடமாக பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைத்தியர்களால் அடையாளம் காணப்பட்ட சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட 862 மருந்துகள்இலங்கையின் மருந்துகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது
என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் “ரமேஷின் மருந்து இறக்குமதியை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்” என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இதில் எந்தவித அடிப்படை அல்லது அத்தகைய நடவடிக்கையும் இல்லை.
அவ்வாறு செய்ய வேண்டிய அவசிய மும் இல்லை. மக்களுக்கு தேவையான
மருந்துகளை முடிந்தவரை வழங்குமா றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய இந்தியாவிலிருந்து எந்த நிறு
வனமும் தெரிவு செய்யப்படவில்லை.

அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், அதுமருந்து ஒழுங்குறுத்தல் அதிகார சபையில் பதிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை.
இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இரு அரசாங்கங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை மருந்துக் கம்பனியின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருக்கின்றேன்.
நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )