தேசிய மக்கள் சக்தி அர்ச்சுனா போன்ற பலரை திரைமறைவில் பாவித்து வருகின்றது
அர்ச்சுனா எம்பி யூடியூப்பில் ஹீரோவாக இருக்கலாம் நிஜத்தில் ஹீரோவாக இருந்தால் செய்து காட்டலாம் என எம் .கே . சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், ”தேசிய மக்கள் சக்தி அர்ச்சுனா போன்ற பலரை திரைமறைவில் பாவித்து வருகின்றது. பலருக்கு பின்னாலே தேசிய மக்கள் சக்தி நின்றது .பல அமைப்புகள் ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ,பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தி ஊடுருவிய இருந்தார்கள் .
பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு செல்லும் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும் .ஆகவே அர்சுனா ஹீரோவாக இருப்பது யூடியூப்பில் தான் ஆனால் நிஜத்தில் அவர் செய்து காட்டவேண்டும் அவ்வாறு செய்து காட்டினால் அவரை நாம் வாழ்த்துவோம் .” என தெரிவித்தார்.
பிரதீபன்