2025ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.