சர்வ மத வழிபாட்டுத் தலங்களுக்கு இலவச சூரிய மின்கல தொகுதி

சர்வ மத வழிபாட்டுத் தலங்களுக்கு இலவச சூரிய மின்கல தொகுதி

நாடளாவிய ரீதியில் சர்வ மத வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக சூரிய மின்கலத்தொகுதியை எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சகம் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டமானது இந்திய அரசின் 17 மில்லியன் டொலர் நிதியுதவியுடன், மின்சார சபை, இலங்கை சூரிய சக்தி ஆணைக்குழுவும் இணைந்து அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள இந்து கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் பௌத்த விகாரை என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கியதாக இத்திட்டம் எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டத்தின் கீழ், இது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5000 மத வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அந்த வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் ஐந்து கிலோவாற்று (5 Kw) திறன் கொண்ட சூரிய மின்கலத்தொகுதிகள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தால் மத வழிபாட்டுத் தலங்களின் மின் கட்டணம் குறைக்கப்படுவதுடன், மின் நுகர்வுக்குப் பின் எஞ்சியிருக்கும் மின் அலகுகளின் அளவு தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும்.

ஆரம்ப கட்டத்தில் நிறுவப்படும் 5000 சூரிய சக்தி அமைப்புகளில், ஒவ்வொரு மாதமும் ஒரு சூரிய சக்தி அமைப்பிலிருந்து 500-600 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )