சமநிலையில் அத்லாண்டா – லேஸியோ போட்டி
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று (29) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ பிறெஸ்சியானி பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை பிஸாயோ டெலே-பஷிரு பெற்றார்.
CATEGORIES Sports News