நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
மாத்தளை உவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் நேற்று (28) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் இருந்து பீப்பாய் ஒன்றை அகற்ற முற்பட்ட போது நீரில் விழுந்துள்ளார்.
தண்ணீரில் விழுந்த இளைஞரை காப்பாற்ற மற்றைய இளைஞரும் ஆற்றில் குதித்ததாகவும், இருவரும் அடித்து செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாத்தளை, கிவுல சுடுககவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய சானக மதுஷங்க மற்றும் மாத்தளை களுதாவளை முதலாம் பத்தம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மெனுகா மதுஷங்க அபேசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka